6/27/2011 12:43:38 PM
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
வாலிப கவிஞரை சமீபத்துல கேப்டன் ஹீரோ ரகசியமா சந்திச்சாராம்... சந்திச்சாராம்... ரெண்டு பேரும் 4 மணி நேரம் பேச¤னாங்களாம்... பேசினாங்களாம்... இந்த ரகசியத்தை சமீபத்துல நடந்த கேசட் விழாவுல பேசும்போது கவிஞரே போட்டு உடைச்சாராம்... உடைச்சாராம்... கட்சிக்கு பாடல் எழுதக் கேட்டாரா, இல்லை வேற விஷயமான்னு கேட்டா, Ôஅதெல்லாம் வெளிய சொல்ல முடியாதுÕன்னு கவிஞரு எஸ்ஸாயிட்டாராம்... எஸ்ஸாயிட்டாராம்...
உலக ஹீரோ படத்துலேருந்து நீக்கப்பட்டதால செல்வ இயக்கம் அப்செட்ல இருக்காராம்... இருக்காராம்... யாராவது அது பற்றி கேட்டா, ப்ளீஸ் எங்கிட்ட இது பற்றி எதுவும் கேட்காதீங்கன்னு சொல்றாராம்... சொல்றாராம்... சமீபத்துல பத்திரிகையாளர்களை சந்திச்ச இயக்கம், உலக ஹீரோ படம் சம்பந்தமா எதுவும் கேட்காதீங்கன்னு முன்னாடியே சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்...
ஏழாவது சென்ஸ் படத்தை முடிச்சிட்டு இந்திக்கு போற ஐடியால இருக்கிறாராம் முருக இயக்குனரு. ஆனா கில்லி நடிகரோட அப்பாவோ, இயக்குனரோட கால்ஷீட்டை வாங்க தவம் கிடக்கிறாராம்... கிடக்கிறாராம்... Ôகில்லியை வச்சு ஒரு படம் பண்ணிட்டு போயிடுங்கÕன்னு முருக டைரக்டர்கிட்ட நைசா பேசிட்டிருக்கிறாராம்... பேசிட்டிருக்கிறாராம்...
Post a Comment