வேங்கை: கைவிட்டது சன்!!

|


தனுஷின் அடுத்த படமான வேங்கையை முதலில் வெளியிடுவதாக இருந்த சன் பிக்சர்ஸ் இப்போது பின் வாங்கிவிட்டது.

எந்திரனுக்குப் பின் சன் பிக்சர்ஸ் கடைசியாக வெளியிட்ட படங்களில் வசூல் ரீதியாக எந்தப் படமும் தேறவில்லை, விருதுகளைக் குவித்த ஆடுகளம் உள்பட.

கடைசியாக வெளியான மாப்பிள்ளை மற்றும் எங்கேயும் காதல் இரண்டுமே தோல்வியைத் தழுவின.

இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் தனது வெளியீடுகளை சத்தமில்லாமல் குறைத்துக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் வாங்க ஒப்புக் கொண்ட பாலாவின் அவன் இவன் படத்திலிருந்து பின் வாங்கிய சன் பிக்சர்ஸ், இப்போது தனுஷின் வேங்கை படத்திலிருந்தும் விலகிக் கொண்டது. இத்தனைக்கும் படத்தின் இசை வெளியீடு கூட சன் டிவி ஸ்டுடியோவில்தான் நடந்தது.

இப்போது படத்தின் தயாரிப்பாளரான பாரதி ரெட்டியே நேரடியாக களமிறங்கியுள்ளார். திரையரங்குகளை இவரே நேரடியாக ஒப்பந்தம் செய்து வருகிறார்.

ஹரி இயக்கத்தில் தனுஷ் – தமன்னா நடித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். ஜூலை 7-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.

 

Post a Comment