உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, ராஜேஷ் இயக்கிவரும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் முக்கிய வேடத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.
ஆனால் இந்தபர் படத்தில், ஹன்சிகா மோத்வானிதான் கதாநாயகி.
இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்று நடந்தது.
படப்பிடிப்புக்கு ஆண்ட்ரியா, டெல்லியை சேர்ந்த ஒரு பெண் மேக்கப் கலைஞரை அழைத்து வந்தார். இதற்கு, தமிழ் மேக்கப்மேன்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
சங்க சட்டதிட்டத்தின்படி, இங்குள்ள மேக்கப்மேனைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஆண்ட்ரியாவிடம் வற்புறுத்தினார்கள். அதற்கு ஆண்ட்ரியா சம்மதிக்காததால், ‘மேக்கப்மேன்கள்’ அவரை சுற்றிலும் நின்றபடி, முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
வட இந்திய மேக்கப் மேன் இல்லாமல் தன்னால் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாது என்று கத்திய ஆன்ட்ரியா, தரையில் உட்கார்ந்து போராட்டம் செய்துள்ளார்.
இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த பிரச்சினையில் வெளிநாட்டில் உள்ள உதயநிதி ஸ்டாலின் உடனடியாக தலையிட்டார். படப்பிடிப்பு குழுவினர் மூலம் ஆண்ட்ரியாவுக்கும், மேக்கப்மேன்களுக்கும் சமாதானம் செய்து வைத்தார்.
வட இந்திய மேக்கப் மேனும் அனுப்பப்பட்டார். அதன்பிறகு, படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது.
Post a Comment