நீச்சல் உடைக்கு தயாரா?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நீச்சல் உடைக்கு தயாரா?

6/25/2011 12:49:29 PM

மேக்னா கூறியது: தமிழில் 'காதல் சொல்ல வந்தேன்' படத்தில் நடிப்பு பற்றி கற்றுக்கொண்டேன். தற்போது 'உயர்திரு நானூற்றி இருபது' படத்தில் கார் கம்பெனியில் வேலை செய்யும் மாடர்ன் கேர்ளாக நடிக்கிறேன். இதன் ஷூட்டிங் மலேசியா, சென்னை, பெங்களூரில் நடந்தது. அடுத்து 'கள்ளச் சிரிப்பழகா', 'நந்தா நந்திதா' ஆகிய படங்களிலும் மலையாளத்தில் சரத்குமாருடன் 'அச்சன்ட ஆண்மக்கள்' உள்பட 2 படங்களிலும், கன்னடத்தில் ஒரு படமும் நடிக்கிறேன். கிளாமர் வேடங்களில் மட்டுமில்லாமல் கிராமத்து பெண் வேடத்திலும் நடிக்க ஆசை. 'நந்தா நந்திதா' படத்தில் கிராமத்து டச்சுடன் எனது வேடம் அமைந்துள்ளது. 'நயன்தாரா, த்ரிஷா, ஸ்ரேயா போன்ற முன்னணி நடிகைகளில் எந்த நடிகையின் இடத்தை பிடிக்க ஆசை?' என்கிறார்கள். அவரவர்களுக்கு உள்ள இடத்தை யாரும் பிடிக்க முடியாது. எனக்கென்று ஒரு இடம் நிச்சயம் பிடிப்பேன். 'நீச்சல் உடையில் நடிப்பீர்களா?' என்றும் கேட்கிறார்கள். இதுவரை நீச்சல் உடையில் நடிக்க யாரும் கேட்க வில்லை. அப்படி கேட்கும்போது அதுபற்றி முடிவு செய்வேன்.

 

Post a Comment