கௌதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கௌதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா!

6/27/2011 12:02:33 PM

கௌதம் மேனன் இயக்கும் புது படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்கிறார். ஜீவாவுக்கு ஜோடியாக சமந்தாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார் கௌதம். தன்னுடைய படங்களில் நடிக்கும் ஹீரோ மற்றும் ஹீரோயினைப் பிடித்துவிட்டால் அவரை வைத்து அடுத்தடுத்துப் படங்கள் பண்ணுவது கௌதம் ஸ்டைல். இதற்கு உதாரணம் சூர்யா, ஜோதிகா மற்றும் சமீராரெட்டி, போன்ற ஸ்டார்கள் அடுத்தடுத்த கௌதம் மேனன் படங்களில் நடித்தவர்கள். அந்த வரிசையில் தற்போது இப்போது சமந்தாவும் இடம்பெற்றுள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சின்ன வேடத்தில் வந்த சமந்தா தெலுங்கு விண்ணைத்தாண்டி வருவாயில் த்‌ரிஷா நடித்த மெயின் கதாபாத்திரத்தில் நடித்தார். அவரையே தனது அடுத்த தமிழ்ப் படத்துக்கும் ஒப்பந்தம் செய்திருக்கிறார் என தகவல்கள் கூறுகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவுள்ளது.




 

Post a Comment