அடுத்து விஜய்யுடன் இவர் நடித்துள்ள வேலாயுதம் வரவிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி படம் வேகமாக வளர்ந்து வருகிறது.
தெலுங்கில் ஓ மை ப்ரண்ட் எனும் படத்திலும் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடி சித்தார்த்.
இந்த மூன்று படங்களுக்காகவும் சென்னை, மதுரை, ஹைதராபாத் என மாறி மாறி பறந்துகொண்டிருக்கிறார். இப்படி ஓயாத பயணத்தால் அவருக்கு காய்ச்சலே வந்துவிட்டதாம்.
ஆனாலும் காய்ச்சலைக் கூட பொருட்படுத்தாமல் கண்டீரவா என்ற தெலுங்குப் படத்துக்காக சுவிட்ஸர்லாந்து போய் நடித்துக் கொடுத்துள்ளார் ஹன்ஸிகா.
“அந்தப் படத்துக்காக ஏற்கெனவே தேதி கொடுத்துவிட்டிருந்தேன். காய்ச்சலைக் காரணம் காட்டி நடிக்கப் போகாமல் நின்றுவிட்டால் தயாரிப்பாளருக்கு வீண் நஷ்டம். காய்ச்சல் என்னோடு போகட்டும் என்று கருதி, கஷ்டப்பட்டு நடித்துக் கொடுதேன்,” என்றார் ஹன்ஸிகா.
இந்த தொழில் பக்திதான் தொடர் தோல்விகளிலிருந்து அவரைக் காக்கிறது போலும்!
Post a Comment