தூள், சாமி போன்ற கதைக்காக காத்திருக்கிறேன், அதான் லேட்-விக்ரம்

|

Tags:


தூள், சாமி மாதிரி அதிரடி ஆக்ஷன் கதைகளில் நடிக்கவே நான் ஆசைப்படுகிறேன் என்கிறார் நடிகர் விக்ரம்.

சமீபத்தில் தனது புதிய படம் ஒன்றிற்காக நிருபர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "தில், தூள், சாமி போன்ற படங்களில், ஆக்ஷன், ரொமான்ஸ் என எல்லாமே சரியாக இருந்தது.

அந்த மாதிரி படங்களில் நடிக்கததான் நான் விரும்புகிறே ன். எனது அடுத்த படம் இந்த மாதிரி அமையும்.

கிளாஸிக், மசாலா என எந்த வரையறைக்குள்ளும் சிக்காமல் நடிக்கவே நான் விரும்புகிறேன்.

எனது ஒவ்வொரு படங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி விழுவதை இனி தவிர்க்க முயற்சித்து வருகிறேன். இந்த இடைவெளியை நானாக விரும்பி தேடிப்போவதில்லை. சில படங்களில் அப்படியாகிவிடுகிறது. இதற்காக யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை," என்றார் வி� ��்ரம்.

விக்ரமின் அடுத்த படத்தை இயக்குபவர் சுசீந்திரன். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடி, நாம் முன்பே அறிவித்த தீக்ஷா சேத். பிரபல தெலுங்கு நடிகை.

இந்தப் படத்திலும் சுசீந்திரன் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி தொடர்கிறது.
 

Post a Comment