சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமியின் மறுபக்கம்

|

Tags:



மதுரை: நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமானின் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமி பற்றி பல அதிர்ச்சி தகவல்கள் சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இது குறித்து சின்னத்திரை வட்டாரங்களில் கூறப்படுவதாவது:

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த பின்னர் டிவி பக்கம் வந்தார் விஜயலட்சுமி. நடிகை ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரித்த கேம் ஷோவான தங்கவேட்டை நிகழ்ச்சியை தொகுத்து அளித்தார். அப்போது, ஏன் லேட்டா வர்றீங்க..? என்று கேட்டால்கூட, ராடன் ஆபீஸுக்கு புகாரை அனுப்பி வைப்பார்.

இந்தத் தொல்லை தாங்காமலேயே அவரிடம் நேராகப் பேசாமல் இடைத்தரகராக இணை இயக்குநர் ஒருவரை வைத்துக் கொண்டுதான் அவரைப் பலரும் சமாளித்து வந்தனர்.

அவரைத் தவிர்த்துவிட்டு சீரியலை தொடர முடியாத சூழல் வந்தபோது தான், வேறு வழியில்லாமல் அனைத்து விவகாரங்களும் ராதிகா முன்பு வைக்கப்பட்டு பஞ்சாயத்து நடத்தப்பட்டதாகக் கூற சொல்லப்படுகிறது.

தங்கவேட்டை நிகழ்ச்சி இயக்குநர் ரமேஷ் தன்னை காதலித்து ஏமாற்றியதாக விஜயலட்சுமி போலீஸில் புகார் கொடுத்தார். அதனால் தான் அவரை அந்த இரண்டு தொடர்களிலிருந்தும் தூக்கினார்கள். பாவம் அந்த இயக்குநர் சில நாட்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். பெரும்பாடுபட்டு அந்த வழக்கை வாபஸ் பெற வைத்தார்கள்.

கன்னட நடிகருடன் காதல் வாழ்க்கை:

கடந்த 2008ம் ஆண்டு கன்னட நடிகர் லோகேஷின் மகன் ஸ்ரூஜன் லோகேஷுடன் விஜயலட்சுமி காதல் கொண்டு நிச்சயத்தார்த்தம் நடந்தது. பின்பு இந்தக் காதலும் 6 மாதத்தில் முறிந்து போய்விட்டது. ஸ்ரூஜன் வேறொரு சின்னத்திரை நடிகையை திருமணம் செய்து கொண்டு போய்விட்டார்.

இதனையடுத்து தான் விஜயலட்சுமி பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் தமிழில் ரீ எண்ட்ரீயானார்.

இப்போது திடீரென சீமான் மீது புகார் கூறியுள்ளார். இந்த விவகாரத்திற்கு பின்னனியில் திரைப்பட நாடக நடிகரும், காமெடி நடிருமான ‘சே’ என்பவர் பின்னணியில் உள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Post a Comment