டெய்சி திடீர் திருமணம்

|

Tags: nbsp


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

டெய்சி திடீர் திருமணம்

6/2/2011 3:32:57 PM

‘சக்கரவியூகம்’ படத்தில் நடித்தவர் டெய்சி போபண்ணா. பிரியதர்ஷனின் ‘கரம் மசாலா’ இந்தி படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர், தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார். அதன் பின் தமிழுக்கு வந்தார். பட வாய்ப்புகள் இல்லாததால் மும்பைக்கு திரும்பினார். இந்நிலையில் திடீரென தனது காதலனை கரம் பிடித்திருக்கிறார் டெய்சி. பிரியங்கா சோப்ராவின் மேனேஜராக இருந்தவர் பிரகாஷ் ஜாஜு. பிரியங்காவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரிடமிருந்து விலகினார். பிரகாஷ் ஜாஜுவின் மகன் அமித். இவரும் இந்தி சினிமாவில் பிஆர் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார் டெய்சி. சமீபத்தில்  திடீரென இந்தூரில் இவரை திருமணம் செய்து கொண்டார் டெய்சி. இந்த திருமணத்தில் சினிமா உலகை சேர்ந்த யாரும்  அழைக்கப்படவில்லை. இரு குடும்பத்தார் மட்டுமே பங்கேற்றனர். இது பற்றி டெய்சி கூறும்போது, “இது ரகசிய திருமணம் கிடையாது. குடும்பத்தார் மட்டுமே பங்கேற்ற விழா. திருமணம் என்பது எனது சொந்த விஷயம். அதனால்தான் அமித்துடன் காதல் என்பதை வெளியே சொல்லவில்லை” என்றார்.

 

Post a Comment