திறமை இருந்தாதான் தாக்குப் பிடிக்க முடியும்! - காஜல் அனுபவம்

|


வெறும் கவர்ச்சி – அழகை மட்டும் வைத்துக் கொண்டு சினிமாவில் காலத்தை ஓட்ட முடியாது. திறமைதான் முக்கியம், என்று தத்துவமழை பொழிகிறார் நடிகை காஜல் அகர்வால்.

பொம்மலாட்டத்தில் அறிமுகமாகி, மகதீராவில் உச்சத்துக்குப் போன நடிகை காஜல், மீண்டும் தமிழில் மாற்றான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தனது அனுபவங்கள் குறித்து அவர் இப்படிச் சொல்கிறார்:

குறுகிய காலம்தான் என்றாலும், அதற்குள் சினிமாவில் நிறைய கற்றுக்கொண்டேன். நடிகைகளுக்குள் போட்டி உள்ளது. இது ஆரோக்கியான போட்டியாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. நான் யார் மீதும் பொறாமைப்பட்டதில்லை.

உழைப்பைத்தான் நம்புகிறேன். சினிமாவில் நேரம்தான் முக்கியம். நேரம் ஒர்க் அவுட் ஆகும்போதே முடிந்தவரை சம்பாதிக்க முயற்சிக்கணும். இல்லேன்னா காணாமல் போயிடுவோம்.

சினிமாவில் அழகை வைத்து மட்டும் நிலைக்க முடியாது. திறமை இருந்தால்தான் வரவேற்பார்கள். இல்லாவிட்டால் ஓரம்கட்டி விடுவார்கள்.

நான் யாரையும் காதலிக்கவில்லை. கல்லூரி நாட்களில் நிறைய காதல் கடிதங்கள் வந்துள்ளன. பள்ளி, கல்லூரியில் வரும் காதல் உண்மையானது அல்ல. ஒரு ஈர்ப்புதான். அதனால்தான் நான் அவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை,” என்றார்.

 

Post a Comment