சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில், தலைவர் பதவிக்கு பாரதிராஜா மீண்டும் போட்டியிடுகிறார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்� �ள் சங்க அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த சங்கத்தில் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் என மொத்தம் 2,100 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். கடந்த முறை தலைவராக பாரதிராஜா இருந்து வந்தார்.
மீண்டும் போட்டி
வருகிற 19-ந் தேதி நடைபெற இருக்கும் தேர்தலில், தலைவர் பதவிக்கு பாரதிராஜா மீண்டும் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வ� ��ணி, பொருளாளர் பதவிக்கு எழில் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
பாரதிராஜாவை எதிர்த்து தலைவர் பதவிக்கு அமீர் போட்டியிடுகிறார். இவருடைய அணியில் துணைத் தலைவர்கள் பதவிக்கு ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகிய இருவரும் போட்டியிடுகிறார்கள். செயலாளர் பதவிக்கு சேரன் போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு ஜனநாதன் போட்டியிடுகிறார்.
செயற்குழு உறுப்பினர்கள்
இதே அணியில் வசந்தபாலன், சிம்புதேவன், பிரபு சாலமன், ஏ.வெங்கடேஷ், பாலசேகரன் உள்பட பலர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

Post a Comment