6/8/2011 10:58:45 AM
தமிழில் 'வெப்பம்', '180' படங்களில் நடித்துள்ளவர் மலையாள நடிகை நித்யா மேனன். அவர் கூறியதாவது: குழந்தை நட்சத்திரமாக நடிப்பை தொடங்கினாலும் பத்திரிகையாளராக வேண்டும் என்று ஜர்னலிசம் படித்தேன். பிறகு இயக்குனராவதற்கான முயற்சியில் இருந்தேன். பின்னர் புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவாளர் கோர்ஸுக்கு விண்ணப்பிக்கும்போது, தெலுங்கு இயக்குனர் நந்தினி ரெட்டியை சந்தித்தேன். அவர், என்னை 'நீ ஹீரோயினாக நடிக்கலாம். இதெல்லாம் படிக்க வேண்டாம்' என்றார். பிறகு கன்னடத்தில் நடிகை ஆனேன். மலையாள படம் மூலம் ஹீரோயின் ஆனேன். கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ்ப் படங்களில் நடித்துவருவதால் என்னை மலையாள நடிகை என்று சொல்வதில் அர்த்தமில்லை. சிலர் என்னை சவுந்தர்யா போல் இருப்பதாகவும் சிலர் ஜெனிலியா போல் இருப்பதாகவும் சொல்கிறார்கள். யாருடனும் என்னை ஒப்பிடுவதை விரும்பவில்லை. நான் நானாக இருக்கவே விரும்புகிறேன். தெலுங்கு ஹீரோ வெங்கடேஷின் படத்தில் நடிக்க மறுத்ததைப் பற்றி கேட்கிறார்கள். அவருக்கும் எனக்குமான வயது வித்தியாசம் அதிகம். படத்தில் எங்களைப் பார்த்தால் கண்டிப்பாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதனால்தான் மறுத்தேன். '180' படத்துக்குப் பிறகு சித்தார்த்துடன் நான் நடிக்க வேண்டிய தெலுங்கு படம் 'ஓ மை பிரண்ட்'. கடைசி நேரத்தில் நீக்கப்பட்டது ஏன் என்கிறார்கள். இது எல்லாருக்கும் தெரிந்ததுதான். சித்தார்த், ஸ்ருதிஹாசனுடன் நடிக்க விரும்பினார். அதனால் நான் நீக்கப்பட்டேன். இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.
Post a Comment