காதலித்து ஏமாற்றி விட்டார் : இயக்குநர் சீமான் மீது நடிகை பரபரப்பு புகார்!

|

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காதலித்து ஏமாற்றி விட்டார் : இயக்குநர் சீமான் மீது நடிகை பரபரப்பு புகார்!

6/2/2011 3:28:08 PM

இயக்குநர் சீமான் மீது போலீஸ் கமிஷனரிடம் நடிகை புகார் செய்துள்ளார். ‘பிரண்ட்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. பின்னர் ‘கலகலப்பு’, ‘ராமச்சந்திரா’, ‘மிலிட்டரி’, ‘சூரி’, ‘எஸ் மேடம்’, ‘வாழ்த்துக்கள்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படங்களில் நடித்து பிரபலமானார். கன்னடம், தெலுங்கு படங்களிலும், டிவி சீரியல்களிலும் விஜயலட்சுமி நடித்திருக்கிறார். இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி நேற்று மதியம் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “நானும் இயக்குநர் சீமானும் காதலித்தோம். தற்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டார். அதனால், போலீஸ் விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறியிருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக நடிகை விஜயலட்சுமியின் செல்போனை தொடர்பு கொண்டால் அவர் எடுக்கவில்லை. அவரது சகோதரி பேசினார். அவரிடம் கேட்டால், “அக்காவுக்கு உடல்நிலை சரியில்லை; தூங்கிக் கொண்டு இருக்கிறார். எனது அக்காவும் இயக்குநர் சீமானும் காதலித்து வந்தனர். திருமணம் செய்வதாக கூறினார். இந்நிலையில் திடீரென சீமான் அக்காவை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டார். அக்காவை விட்டு சில நாட்களாக அவர் ஒதுங்கி செல்கிறார். மேற்கொண்டு என்னால் எதுவும் சொல்ல முடியாது” என்று கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

 

Post a Comment