கிராமத்துப் பெண்ணாகவே நடிப்பது ஏன்?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கிராமத்துப் பெண்ணாகவே நடிப்பது ஏன்?

6/20/2011 11:52:33 AM

நடிகை மீரா நந்தன் கூறியதாவது: மலையாளத்தில் நான் நடித்த 'சங்கரனும் மோகனனும்' இப்போது வெளிவந்திருக்கிறது. தமிழில் 'சூரியநகரம்' வெளி வர வேண்டி இருக்கிறது. இதில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளேன். தொடர்ந்து கிராமத்து பெண் கேரக்டரிலேயே நடிக்கிறீர்களே என்கிறார்கள். மாடர்னான கேரக்டரில் நடிக்க எனக்கும் ஆசைதான். ஆனால் அதுபோல் கேரக்டர்கள் எனக்கு அமையவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை. தற்போது வேறெந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. எனது பட்டப் படிப்பின் கடைசி வருடம் என்பதால் கதை கேட்காமல் படிப்பில் கவனம் செலுத்தி வந்தேன். இப்போது ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறேன். இந்த இடைவெளியில் வேறு ஏதாவது செய்யலாம் என்று தோன்றியது. அதனால் யோகா செல்லத் துவங்கினேன். இப்போது அதிலும் தேர்ச்சி பெற்று விட்டேன்.

 

Post a Comment