தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவராக இயக்குநர் பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சங்கத்தின் பல்வேறு பதவிகளுக்காக நேற்று சென்னை வடபழனியில் தேர்தல் நடந்தது. இதில் 21 பதவிகளுக்காக மொத்தம் 48 வேட்பாளர்கள் ஒருங்கிணைந்த இயக்குநர்கள் அணி மற்றும் புதிய அலை என இரு பெயர்களில் போட்டியிட்டனர்.
நேற்று நிறுத்தி வைக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
இதில் மொத்தம் பதிவான 1279 வாக்குகளில், பாரதிராஜா 1003 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட இயக்குநர் அமீர் 901 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
இயக்குநர் சேரன், சமுத்திரக்கனி இருவரும் துணைத்தலைவர்களாகவும், இயக்குநர் எஸ்பி ஜனநாதன் பொருளாளராகவும் போட்டியின்றி தேர்வு பெற்றனர்.
Post a Comment