மக்கள் விரும்பும்வரை குத்தாட்டம் போடுவேன்: மல்லிகா ஷெராவத்

|


டொரண்டோ: மக்கள் விரும்பும் வரை தான் தொடர்ந்து குத்துப்பாட்டுகளுக்கு ஆடப்போவதாக இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் தெரிவித்துள்ளார்.

கனடாவில் நடந்த ஐஐஎப்ஏ விழாவில் இந்தி நடிகை மல்லிகா ஷெராவத்தின் முதல் ஹாலிவுட் படமான பாலிடிக்ஸ் ஆப் லவ் திரையிடப்பட்டது.

அப்போது மல்லிகா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது,

இந்தியாவில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடிப்பது எனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. இப்பொழுதெல்லாம் நான் மிகுந்த கவனத்துடன் படங்களைத் தேர்வு செய்கிறேன்.

எனது குத்தாட்டப் பாடல்கள் பற்றி மக்கள் பாராட்டும்போது பெரு மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் விரும்பும் வரை நான் குத்துப் பாட்டுகளுக்கு ஆடுவேன். பாலிவுட்டுக்கும், ஹாலிவுட்டுக்கும் பட்ஜெட்டைத் தவிர வேறு பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

அப்போது மல்லிகாவுடன் இருந்த பாலிடிக்ஸ் ஆப் லவ் நாயகன் ஹாலிவுட் நடனக் கலைஞர் பிரயன் ஜே. ஒயிட் கூறியதாவது,

பாலிவுட் செயல்பாடுகளைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். இந்திய மக்களுக்காக பாலிடிக்ஸ் ஆப் லவ் அடுத்த பாகம் கொண்டு வர விரும்புகிறேன். ஐஐஎப்ஏ விழாவில் எனக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பைப் பார்த்து எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனது நடனக் குழுவுடன் இந்தியாவுக்கு செல்வது என் கனவு என்றார்.

அடுத்து மல்லிகா கூறுகையில், இந்திய திரையுலகத்தைப் பற்றி தெரிந்துகொள்ளத் தான் பிரயனை ஐஐஎப்ஏ விழாவுக்கு அழைத்து வந்தேன் என்றார்.
 

Post a Comment