தந்தையர் தினமான ஜூன் 19ம் தேதியான நேற்று நடிகை மந்திரா பேடி ஒரு அழகான ஆண் குழந்தைக்குத் தாயானார்.
மந்திரா பேடிக்கு், ராஜ் கெளசலுக்கும் திருமணமாகி 11 ஆண்டுகளாகிறது. இந்த நிலையில், தற்போதுதான் கர்ப்பமடைந்தார் மந்திரா. ஜூன் 19ம் தேதியான நேற்று மும்பையில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு வீர் என பெயரிட்டுள்ளனர் மந்திரா பேடி, கெளசல் தம்பதியினர்.
இதுகுறித்து ராஜ் கெளசல் வெளியிட்டுள்ள ட்விட்டர் தகவலில், மிகச் சிறந்த தந்தையர் தினமாக இது எனக்கு அமைந்துள்ளது. இதற்காக வீருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனது வாழ்க்கையில் சிறந்த பரிசைக் கொடுத்ததற்காக மந்திராவுக்கும் நன்றி சொல்கிறேன். தாயும், சேயும் நலமாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.
தான் கர்ப்பமாக இருந்த காலகட்டத்தில் தனது உடல் நிலை குறித்து தொடர்ந்து ட்விட்டர் மூலம் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் மந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment