அவன்-இவன் படத்தில் சொரிமுத்து அய்யனார் பற்றி அவதூறு-சிங்கம்பட்டி ஜமீன் புகார்

|


விஷால்-ஆர்யா நடித்து வெளியான அவன்-இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும், சொரிமுத்து அய்யனார் கோவில் பறறியும் அவதூறாக வசனம் இருப்பதாக ஜமீன் குறறம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சிங்கம்பட்டி இளைய ஜமீன் தாயப்பராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:

தென்மாவட்டத்தில் புகழ் பெற்ற ஜமீன்களில் சிங்கம் பட்டி ஜமீனும் ஓன்று. அம்பை தாலுகாவில் 1910ல் இலவச மருத்துவமனை, இலவச பள்ளி ஜமீன் தீர்த்தபதி ராஜா பெயரில் கட்டிகொடுக்கப்பட்டு இன்னும் அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுபோல் நெல்லை டவுன் நாலு ரதவீதியிலும் தேரோட்ட நேரத்தில் தண்ணீர் டேங்குகள் அமைத்து கொடுப்போம்.

காரையாறில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் சிங்கம்பட்டி சமஸ்தானத்துக்கு உட்பட்டது. நெல்லை மாவட்ட மக்கள் அதை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோயிலில் ஆடி, அமாவசை திருவிழாவின் போது 5 லட்சம் பேர் கூடுவார்கள். அன்று எனது மூத்த சகோதரரும், தற்போதைய ஜமீன்தாரருமான முருகதாஸ் தீர்த்தபதி ராஜா ராஜ உடையில் தரிசனம் வழங்குவார். இதுபோன்ற விழா தமிழ்நாட்டில் வேறு எங்கும் கிடையாது.

இன்றும் பொதுமக்கள் எங்கள் மீது பாசத்தோடும், மரியாதையோடும் இருக்கிறார்கள். நாங்களும் எங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறோம். இப்படி இருக்கையில் புகழ் பெற்ற ஜமீனையும், பழமையான சொரி முத்து அய்யனார் கோவிலையும் அவன்-இவன் படத்தில் அவதூறாக காட்டியுள்ளனர்.

படத்தில் ஜமீன் தீர்த்தபதி என்று ஒரு கிராமத்தை காட்டுகிறார்கள். அங்கு தீர்த்தபதி என்று கேரக்டரை உருவாக்கி அவர் குடிப்பது போன்றும், சுற்றுலா விடுதியில் சண்டை போடுவது போன்றும், இறுதியில் அவரை நிர்வாணமாக்கி விட்டு பொது மக்கள் அடிப்பது போன்றும் உள்ளது.

மற்றொரு காட்சியில் சொரிமுத்து என்ற ஒரு கேரக்டரை உருவாக்கி இந்த கோயிலை நம்பிதான் நீங்கள் வாழ்ந்தி்ட்டு இருங்கிறீங்க என்ற வசனம் வருகிறது. இது எங்களை இழிவு படுத்துவது போல் உள்ளது. இந்த படத்தை இயங்கிய பாலாவை வன்மையாக கண்டிகிறோம்.

உடனடியாக அவதூறு காட்சிகளை நீக்கவிட்டால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
 

Post a Comment