இப்போதெல்லாம் ஒரு நடிகையின் மார்க்கெட் நிலவரம், அவர் எந்த ஜவுளிக்கடையின் விளம்பரத்துக்கு ஒப்பந்தமாகிறாரோ அதைவைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது.
த்ரிஷா, நயன்தாரா, அசின் போன்றவர்கள் உச்சத்திலிருந்தபோது, சென்னையில் டாப் ஜவுளிக் கடைகளின் மாடல்களாக ஒய்யார நடைபோட்டு கோடிகளில் சம்பளம் பெற்றனர்.
இந்த வரிசையில் இப்போது இடம் பெற்றுள்ளவர் ஹன்ஸிகா மோத்வானி. நடித்த இரண்டு படங்களும் பெரிதாக போகவில்லை என்றாலும், அடுத்து விஜய் படத்தில் நாயகியாக நடித்திருப்பதால், இவர் மீது இன்னும் எதிர்ப்பார்ப்பு குறையவில்லை.
இதன் விளைவு, தமிழகத்தின் பிரபல ஜவுளி நிறுவனமான சென்னை சில்க்ஸ் தங்களின் அடுத்த விளம்பரத்துக்கு ஹன்ஸிகாவை புக் செய்துள்ளது.
இதற்காக அவருக்கு ரூ 50 லட்சம் சம்பளம் என்று கூறப்படுகிறது. இது ஒரு படத்துக்கு அவர் பெறும் சம்பளத்தை விட இரண்டு மடங்காகும்!
இன்றைய தேதிக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் தலா மூன்று படங்களுடன் ரேஸில் முந்திக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா.
Post a Comment