கும்கி மூலம் தமிழுக்கு வரும் 15 வயசு லட்சுமி மேனன்!!

|


மலையாள தேசத்திலிருந்து தமிழுக்கு வரும் நடிகைகள் பட்டியல் நாளுக்கு நாள் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போகிறது.

இன்றைக்கு தமிழ் சினிமாவின் முதல்நிலை நடிகைகள் எல்லாருமே மலையாள பார்ட்டிகள்தான்.

அந்த லிஸ்டில் புதிதாக இடம்பிடிக்கிறார் லட்சுமி மேனன். பிரபு சாலமன் தனது கும்கி படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இவரை அறிமுகப்படுத்துகிறார்.

15 வயதே நிரம்பியுள்ள லட்சுமி மேனன் கொச்சியைச் சேர்ந்தவர். எட்டாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார். அதற்கு மேல் எப்போதாவது நேரம் கிடைத்தால் படித்துக் கொள்ளலாம், இப்போதைக்கு கோடம்பாக்கத்துக்கு கலைச் சேவைதான் முக்கியம் என குடும்பத்தினர் முடிவெடுத்ததால், இங்கே வந்திருக்கிறார்.

இதற்கு முன் மலையாளத்தில் ஒரே ஒரு படம் நடித்துள்ளார். அந்தப் படத்தை இயக்கியவர் வினயன். ஆனால் சின்ன வேடம் என்பதால் லட்சுமி மேனன் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் அந்த ஒரே படம் தன்னை, தென்னகத்தின் சினிமா தலைநகரமான சென்னை வரை கொண்டு வந்துவிட்டதை நினைத்து வினயனுக்கு நன்றி சொல்கிறாராம் லட்சுமி.

தமிழுக்கு வந்துட்டீங்கல்ல, கவலையே வேண்டாம்... அடுத்து பாலிவுட்தான்!
 

Post a Comment