பமீலாவுக்கு 44 வயசு!

|


உலகப் புகழ் கவர்ச்சிப் புயல் பமீலா ஆண்டர்சனுக்கு 44 வயது பிறந்துள்ளது. இதை அமைதியான முறையில் அவர் கொண்டாடியுள்ளார்.

படு செக்ஸியான பெண்ணாக ஒரு காலத்தில் உலகை வலம் வந்தவர் பமீலா. பேவாட்ச் என்ற ஒரே டிவி சீரியல் மூலம் உலக இளைஞர்களை வாட்டி வதைத்த பெருமைக்குரியவர் பமீலா. இப்போதும் கவர்ச்சியுடன் வலம் வரும் பமீலாவுக்கு இன்று 44 வயது பிறந்துள்ளது.

1967ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி பிறந்தவர் பமீலா. இவர் பிறந்தபோதே பிரபலமாகி விட்டார். காரணம், கனடா நாட்டின் 100வது பிறந்த நாளின்போதுதான் பமீலாவும் பிறந்தார் என்பதால்.

கனடாவின் நூறாவது பிறந்த நாளின்போது இவர் பிறந்ததால் இவரது பெற்றோர் பேரி, கரோலுக்கு அப்போது பரிசுகள் எல்லாம் கொடுத்து அசத்தினராம்.

இளம் வயதிலேயே பல திரைப்படங்களில் துணை நடிகையாக தலை பிளஸ் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார் பமீலா. அவரது கவர்ச்சிக்கு தனித்துவம் இருப்பதாக தெரிந்ததால் நிறைய வாய்ப்புகள்.

பமீலாவிடம் ஏகப்பட்ட கவர்ச்சி கொட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்த பிளேபாய் இதழ் அவரை அணுகி போஸ் கொடுக்க கோரியது. முதல் முறையாக பமீலாவின் கவர்ச்சிப் படங்களைத் தாங்கி வெளியானது பிளேபாய். அதன் பின்னர் 6 முறை பிளேபாய்க்காக போஸ் கொடுத்தார் பமீலா.

அதன் பின்னர் டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். 1992ம் ஆண்டு அவரைத் தேடி பேவாட்ச் சீரியல் வாய்ப்பு வந்தது. அதில் நடிக்க ஆரம்பித்த பின்னர்தான் பமீலாவின் பிரமாண்ட கவர்ச்சி உலகம் முழுவதும் பளிச்சிட ஆரம்பித்தது.

தொடர்ந்து நிறைய தொடர்களில் நடித்தார். இருந்தாலும் இன்று வரை பமீலாவை பேவாட்ச்தான் உலக மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

பமீலா நிறையப் பேருடன் கிசுகிசுக்கப்பட்டவர். டீன் கெய்ன், சில்வஸ்டர் ஸ்டலோன், ஸ்காட் பயோ, மார்க்ஸ் செக்கன்பெர்க், டாமி லீ ஆகியோர் அவர்களில் சிலர். இதில் டாமி லீயை அவர் மணந்து கொண்டார். பின்னர் டாமி லீ தன்னை அடித்து சித்திரவதை செய்வதாக கூறி விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

டாமி லீ மூலம் பமீலாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சர்வதேசப் புகழ் பெற்ற பமீலா கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த பிக் பாஸ் 4 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு இந்திய இதயங்களையும் சற்று குளிர வைத்து விட்டுச் சென்றார்.
 

Post a Comment