7/27/2011 10:39:56 AM
மலையாள குணச்சித்திர நடிகர் கே.கே (கிருஷ்ணகுமார்), 'தெய்வத்திருமகள்' படத்தில் சாக்லெட் பேக்டரி உரிமையாளராக நடித்திருக்கிறார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எங்கள் குடும்பத்தில் ஆண்கள் அனைவரும் ராணுவத்தில் இருக்கிறார்கள். நான் மட்டும் கலைத் துறைக்கு வந்தேன். செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை துவங்கி நடிகன் ஆனேன். மலையாளத்தில் 70 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். இரண்டு படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளேன். தமிழில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக வர வேண்டும் என்பதற்காக, 5 ஆண்டுகளாக, சென்னையில் தங்கியிருந்து போராடினேன். 'காவலன்' படத்தில் அசினுக்கு அண்ணனாக அறிமுகமானேன். பிறகு 'மழைக்காலம்' படத்தில் நடித்தேன். 'தெய்வத்திருமகள்' எனக்கு பெயர் பெற்றுக் கொடுத்துள்ளது. அடுத்து 'பில்லா2' வில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். தமிழில் நல்ல குணசித்திர நடிகர் என்று பெயர் எடுப்பதே லட்சியம்.
Post a Comment