கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்துள்ளார் பியங்கா தேசாய்.

|


அர்ஜூன் நடிக்கும் காட்டுப்புலி படத்தில் அவருக்கு ஜோடி போட்டு நடிக்கும் பியங்கா தேசாய், கவர்ச்சிப் புலியாக மாறி ரசிகர்களை மிரட்டப் போகிறாராம்.

அர்ஜூன் தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் நடித்து வரும் படம் காட்டுப்புலி. டினுவர்மா இப்படத்தை இயக்குகிறார். அட்டகாசமான அதிரடி சண்டைப் படமாக இது அமையும் என்று கூறும் அர்ஜூன் தரப்பு, படத்தில் பிரமிக்கத்தக்க வகையில் சண்டைக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளனவாம்.

அர்ஜூனின் காதலியாக இப்படத்தில் வருகிறார் பியங்கா தேசாய். இவர் கன்னட நடிகையாவார். பளிச்சென இருக்கும் பியங்கா இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்தப் படத்திற்கு வந்த நேரமோ என்னவோ, நிமிடங்கள் என்ற இன்னொரு படத்திலும் அவர் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் டாக்டராக வருகிறார் பியங்கா.

நடிப்போடு, கவர்ச்சியிலும் ரசிகர்களை சிலிர்க்க வைக்கவுள்ளாராம் பியங்கா. இவர் போதாதென்று ஷாயாலி பகத்தும் படத்தில் இருக்கிறார். இவருக்கும் படத்தில் கவர்ச்சிப் பஞ்சமில்லாத வகையில் ரோல் வைத்துள்ளனர். இவர் ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக, நியூட்டனின் மூன்றாம் விதி படத்தில் நடித்தவராவார்.

காட்டுப்புலி சண்டைப் புலியாக மட்டுமல்லாமல் கவர்ச்சிப் புலியாகவும் சேர்ந்து உருவாகி வருவதால் ரசிகர்களுக்கு 'டபுள் டிலைட்' கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 

Post a Comment