7/13/2011 3:20:10 PM
'கும்கிÕ பட இயக்குனர் பிரபு சாலமன் கூறியது: 'மைனாÕ படத்தை அடுத்து 'கும்கிÕ கதையும் மலைகிராம காட்டுப் பகுதியையொட்டியதாக அமைந்தது. பயிற்சி பெற்ற யானைகளை 'கும்கிÕ என்று சொல்வார்கள். காடுகளைவிட்டு மக்கள் வாழும் பகுதிகளில் யானைகள் வந்து செய்யும் அட்டகாசங்கள் பற்றி பத்திரிகைகளில் படிப்பேன். அதையே கருவாக கொண்டு அழுத்தமான காதல் கதையையும் இணைத்து இந்த ஸ்கிரிப்ட் உருவாக்கி இருக்கிறேன். யானைகளை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள பண்ணாரி முதல் சூளகிரி மற்றும் ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் கி.மீட்டர் அலைந்து மக்கள், அதிகாரிகள், யானை பாகன்களிடம் விவரங்கள் கேட்டறிந்தேன். ஒரு நாளைக்கு 250 கிலோ உணவு உண்டு, 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும் யானையின் தேவைகள் காடுகளில் நடக்கும் ஆக்கிரமிப்பால் குறைந்து வருகிறது. இதை பற்றியும் படத்தில் சொல¢கிறேன். இதில் ஹீரோவாக நடிக்க பல்வேறு புதுமுகங்களை பார்தேன். சிவாஜியின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு பொருத்தமாக இருந்தார். அவர் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
Post a Comment