பாலா மீது மேலும் ஒரு முஸ்லிம் அமைப்பு புகார்!

|


சென்னை: குர்பானி பற்றி அவதூறாக வசனம் வைத்ததற்காக இயக்குநர் மீது பாலா மீது தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் போலீஸ் கமிஷனரிடம் புதிய புகார் கொடுத்துள்ளது.

ஏற்கெனவே தேசிய லீக் இது குறித்து கமிஷனரிடம் புகார் செய்துள்ள நிலையில், இப்போது இரண்டாவது புகார் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் அக்ரம்கான் சென்னை போலீஸ் கமிஷனருக்கு கொடுத்த புகார் மனுவில், "சமீபத்தில் வெளிவந்து உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ள அவன்-இவன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் குர்பாணி கொடுக்கும் புனிதச் செயலை மாபெரும் குற்றச்செயலாக சித்தரித்து காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன. இது அரசியல் சாசனத்திற்கு எதிரான குற்ற செயலாகும். முஸ்லிம் சமுதாய மக்களை புண்படுத்துவதாக உள்ளது.

எனவே அவன்-இவன் படத்தின் இயக்குனர் பாலா மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம் ஆகியோர் மீது மதநம்பிக்கையை புண்படுத்துதல், மத நம்பிக்கை, செயல்பாட்டை குற்றச்செயல்போல் சித்தரித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.
 

Post a Comment