ஏழாம் அறிவு பாடல்கள் இணையத்தில் லீக்?

|


ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் ஏழாம் அறிவு படத்தின் பாடல்கள் இணையதளங்களில் லீக் ஆகிவிட்டதாக பரபரப்பைக் கிளப்பியுள்ளனர்.

சூர்யா - ஸ்ருதி ஹாஸன் நடிக்கும் படம் ஏழாம் அறிவு. இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இணையத்தில் இந்தப் பாடல்களில் இரண்டு மட்டும் சட்டவிரோதமாக வெளியாகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "இன்னும் இசைக் கோர்ப்புப் பணியை ஹாரிஸ் ஜெயராஜ் முடிக்கவில்லை. எனவே இப்போது வெளியாகியிருப்பது என்ன பாட்டு என்று எனக்குத் தெரியாது," என்றார்.

ஆனால் இன்னும் இறுதி இசை சேர்க்காத பாட்டு என்ற பெயரில் பல்வேறு தளங்கள் மற்றும் வலைப்பூக்களில் இந்தப் பாடல்கள் உலா வருகின்றன.
 

Post a Comment