மீண்டும் தெலுங்கில் 'மாட்லாடப்' போகும் ஷ்ரியா

|


தமிழில் கிட்டத்தட்ட சுத்தமாக வாய்ப்பில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஷ்ரியா. இதனால் மீண்டும் தெலுங்குப் பக்கம் கவனத்தைத் திருப்புகிறார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் காலடி வைத்த நடிகை ஷ்ரியா. தமிழிலும், தெலுங்கிலும் அலை பரப்பிய அவர், தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வரவே தமிழிலேயே செட்டிலானார்.

குடும்பப் பாங்கான வேடத்தில் நடிக்க அவர் விரும்பினாலும், காஸ்ட்யூமுக்கு ஏற்ற வகையில் அவரது உடல்வாகு இல்லாததால், தொடர்ந்து கவர்ச்சிகரமாக வலம் வந்தார் ஷ்ரியா.

இருப்பினும் தற்போது ஷ்ரியா அலை தமிழில் அடங்கி விட்டது. இதையடுத்து மீண்டும் தெலுங்குக்குத் திரும்புகிறார் ஷ்ரியா. அல்லரி நரேஷ் ஜோடியாக புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

நாராயணா என்பவர் இயக்கும் இப்படம் பெரும் பொருட் செலவில் உருவாக்கப்படவுள்ளதாம். இப்படத்தின் மூலம் தெலுங்கில் தனது அலையை மீண்டும் பரப்பத் தயாராகி விட்டார் ஷ்ரியா. இந்தியில் வெளியான தீவானா மஸ்தானா பாணியில் படம் இருக்குமாம். வம்சி கிருஷ்ணா இப்படத்தைத் தயாரிக்கிறார்.
 

Post a Comment