'குடிகார அரசு ஊழியர்கள்....!' - தமிழக அரசுக்கு மம்முட்டி கோரிக்கை

|


அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்ல செயல்கள் செய்ய விரும்புகிறேன், என்றார் நடிகர் மம்முட்டி.

மலையாள நடிகர் மம்மூட்டி இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அவரிடம் எடுத்த எடுப்பிலேயே, ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி, தமிழகத்தில் நடிகர் விஜயகாந்த் ஆகியோர் அரசியலுக்கு வந்ததுபோல நீங்களும் அரசியலுக்கு வருவீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர்.

அவர் பதிலளிக்கையில், “நோ பாலிடிக்ஸ் ப்ளீஸ்” என்றார். மீண்டும் கேட்டபோது, “அரசியலில் எனக்கு ஆர்வமில்லை. இதை முன்பே பல முறை சொல்லிவிட்டேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறேன்.

ஏற்கனவே வழிகாட்டி என்ற அமைப்பை தொடங்கி பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் போதை விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறேன். எங்கள் வேண்டுகோளை ஏற்று கேரளாவில் குடித்து விட்டு அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களை போலீசார் கைது செய்கின்றனர்.

தமிழகத்திலும் கூட இந்த பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன். தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,” என்றார்.

 

Post a Comment