உலகைச் சுற்றி வந்த கமல்!

|


கிட்டத்தட்ட உலக ஒரு சுற்று சுற்றிவிட்டு, நேற்று சென்னையில் இறங்கினார் கமல் ஹாஸன்.

எதற்கு இந்த சுற்றல்… எல்லாம் விஸ்வரூபத்துக்காகத்தான்.

முன்பெல்லாம் எங்கெங்கே படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என டிஸ்கஸ் செய்து அங்குள்ள ஆட்களுக்கு சொல்ல ஏற்பாடு செய்யச் சொல்வார்கள்.

ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. நேரடியாக சம்பந்தப்பட்ட லொகேஷனுக்கே போய், தங்கள் மனதில் உள்ள காட்சிக்கு அந்த இடம் பொருந்துகிறதா என்று பார்க்கிறார்கள். படத்துக்கு பட்ஜெட் போடுவது போல, இதற்கும் தனி பட்ஜெட்.

அப்படி போடப்பட்ட ஒரு பெரிய பட்ஜெட்டில் உலகைச் சுற்றிப் பார்த்து, லொகேஷன்களைத் தேர்வு செய்த விட்டு வந்திருக்கிறாராம் கமல்.

உலகிலேயே இதுவரை யாரும் பார்த்திராத பகுதிகளில் இந்தப் படத்தைப் படமாக்கப் போகிறாராம். படத்துக்கு பட்ஜெட் ரூ 100 கோடி.

ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. முதல்கட்டமாக 45 நாட்கள் கனடா மற்றும் அமெரிக்காவில் படப்பிடிப்புக்கு திட்டமிட்டுள்ளனர்.

படத்தில் எல்லாம் முடிவாகிவிட்டது, ஒன்றைத் தவிர… அது, ஹீரோயின்!!

 

Post a Comment