சமீரா ரெட்டி காயம்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சமீரா ரெட்டி காயம்!

7/4/2011 2:59:05 PM

இந்திப் படத்துக்காக ஆக்ஷன் காட்சிகளில் நடித்தபோது காயமடைந்தேன் என்றார் சமீரா ரெட்டி. அவர் மேலும் கூறியதாவது; இந்தியில் பிரியதர்ஷன் இயக்கும் 'தேஜ்' படத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்துக்காக, சில ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளேன். பைக் ஓட்டும் காட்சியில் நடித்தபோது தடுமாறி விழுந்து பலத்த காயமடைந்தேன். இதே போல கடும் குளிரில் தண்ணீருக்கடியில் செல்வது போல் காட்சி. இதில் நடித்தபோது உடல் உறைந்துவிட்டதுபோல உணர்ந்தேன். எனது பெற்றோர்கள் இதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டாம் என்று எச்சரித்தார்கள். ஒரு நாள் இந்திப்படத்துக்காக நடித்துக்கொண்டிருக்கிறேன். மறுநாள் தமிழ்நாட்டின் எங்கோ ஒரு கிராமத்தில் 'வேட்டை'க்காக வேறொரு காட்சியில் நடிக்கிறேன். ஒவ்வொரு நாளும் இப்படி ஆச்சரியங்களை தந்துகொண்டிருப்பது சுகமாக இருக்கிறது. பிரபுதேவா இயக்கத்தில் விஷாலுடன் நடிக்கும் படம் பெரும்பாலும் முடிந்துவிட்டது. 'நடுநிசி நாய்கள்' படத்தில் நடித்தது பற்றி கேட்கிறார்கள். இந்தப் படத்தில், கவுதம் வாசுதேவ் மேனனுக்காகவே நடித்தேன். அதில் நடித்ததில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை.

 

Post a Comment