கமல் ஹாஸன் மீது வருமான வரித்துறை போட்ட வழக்கு தள்ளுபடி!

|


டெல்லி: குருதிப் புனல் படத்தின் வெளிநாட்டு உரிமை வருவாய் தொடர்பாக வருமான வரித்துறை கமல்ஹாஸன் மீது தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குருதிப் புனல் படத்தின் வெளிநாட்டு உரிமையை மாற்றியதில் ரூ 54.50 லட்சம் வரி விலக்கு கோரியிருந்தார் கமல்ஹாஸன். ஆனால் இதை எதிர்த்து தீர்ப்பாயம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது வருமான வரித்துறை. உயர்நீதி மன்றத்தில் கமலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் அப்பீல் செய்தது வருமான வரித்துறை. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வெறும் பெயர் மாற்றத்துக்காக மட்டும் இந்த விலக்கை கமல்ஹாஸன் கோருவது நியாயமில்லை என்று வாதிட்டது வருமான வரித்துறை.

ஆனாலும் வருமான வரித் துறையின் அப்பீல் மனுவை ரத்து செய்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
 

Post a Comment