கோடையில் வசூல் குவித்த கவர்ச்சி படங்கள்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கோடையில் வசூல் குவித்த கவர்ச்சி படங்கள்

7/2/2011 10:07:08 AM

பொதுவாக கவர்ச்சி படங்கள் எப்போதாவது வருவதுண்டு. மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகும் சில ஆர்ட் படங்கள்கூட கவர்ச்சி படங்களின் போர்வையில் வந்து கலக்கும். ஆனால் இந்த கோடையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி படங்கள், ஓசைப்படாமல் கலெக்ஷனை அள்ளிக் கொண்டது. கோடை விடுமுறை துவங்கி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதுமே கவர்ச்சி படங்கள் படையெடுக்கத் துவங்கிவிட்டன.

ஏற்கெனவே தமிழில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கலாம் என்கிற சூழ்நிலை உருவான பிறகு இத்தகைய படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. பெரிய அளவில் விளம்பரம் இல்லாமல் சென்னையில் சில தியேட்டர்களிலும் வெளியூர்களில் அதிக தியேட்டர்களிலும் இத்தகைய படங்கள் வெளியிடப்பட்டு கல்லா கட்டுகின்றன. இந்த கோடை காலத்தில் 'மல்லிகா', 'காமேஸ்வரி', 'மோக மந்திரம்', 'அரங்கேற்ற நாள்' என்ற பெயரில் இந்தி படங்கள் டப் செய்யப்பட்டும், நேரடியாகவும் திரையிடப்பட்டது.

'டைட்டானிக்' கதாநாயகி நடித்த 'தி ரீடர்' என்ற ஹாலிவுட் படம் 'கனவு தேவதை' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதில் 17 வயது இளைஞனுக்கு அவர் காதல் பாடம் சொல்லித் தருவது மாதிரியான கதையாம். ஸ்வேதா மேனன் நடித்த 'தாரம்', 'ரதி நிர்வேதம்' என்ற மலையாளப் படங்கள் கவர்ச்சி சுவரொட்டிகளுடன் கலக்கியது. இவை தவிர நேரடியாக தமிழில் தயாரிக்கப்பட்ட படங்களும் வெளிவந்தது. இன்னும் பல படங்கள் வெளிவரக் காத்திருக்கிறது.

'இது போன்ற படங்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் மாதத்துக்கு பத்து படங்கள் வெளியானால் அதுவும் போரடித்து விடும், கவர்ச்சி காட்சிகள் இருந்தால் மட்டுமே இத்தகைய படங்கள் ஓடுவதில்லை. கதையம்சமும் இருந்தால்தான் ஓடும். பெரிய படங்கள் வெளியாகாத காலங்களில் தியேட்டர்காரர்களும் இத்தகைய படங்களை திரையிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.  

இத்தகைய படங்களால் சிறிய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் சிறிதளவு லாபம் பெறுகிறார்கள். தயாரிப்பு செலவு குறைவு, விளம்பரத்துக்கு அதிக செலவு செய்ய வேண்டியதில்லை என்பது போன்ற அம்சங்கள் இருப்பதால் இது போன்ற படங்களின் வருகை எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் அவை சட்டத்திற்கு உட்பட்டும், நல்ல கருத்துக்களை சொல்லும் படமாக இருந்தால் நன்றாக இருக்கும்' என்கிறார் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி.சேகரன்.

 

Post a Comment