வட இந்தியர் என்றாலும் காஜல் அகர்வாலுக்கு திரையுலகில் ஒரு அந்தஸ்து கொடுத்தது டோலிவுட் தான். பாலிவுட்டில் தன்னை யாரும் அழைக்கமாட்டார்களா என ஏங்கிய காஜலை ரோஹித் ஷெட்டி தனது சிங்கம் படத்தில் நடிக்க அழைத்தார்.
அய்யய்யோ… என்னை பாலிவுட்டில் அழைத்துவிட்டார்கள் என்று ஏக குஷி அடைந்தார் காஜல். இந்த சிங்கம் படம் நம்ம சூர்யா நடித்த சிங்கம் படத்தின் ரீமேக் ஆகும். இந்தி சிங்கத்தில் அஜய் தேவ்கன் தான் ஹீரோ. பாலிவுட்டில் நுழைந்த குஷியோடு படத்தை முடித்துக் கொடுத்தார் காஜல்.
படமும் திரைக்கு வந்தது. ஆனால் படத்தை பார்த்ததும் காஜல் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. காரணம் படத்தில் தான் வரும் ஒரு முக்கிய காட்சியை நீக்கிவிட்டது தான். எடு போனை, கூப்பிடு ரோஹித்தை என்று காஜல் இயக்குனரை தொடர்பு கொண்டால் அவர் சரியான விளக்கம் அளிக்கவில்லையாம்.
நான் தெலுங்கில் எவ்வளவு பெரிய நடிகை ஆனால் இங்கு என்னவென்றால் என்னை மதிக்கமாட்டேன் என்கிறார்களே என்று காஜல் ஆத்திரப்பட்டு்ள்ளார். இதையடுத்து சிங்கம் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.
சர்ச்சையின் மறுபெயர் தான் காஜலோ?
Post a Comment