இந்தி வாய்ப்பை இழந்தார் காஜல்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்தி வாய்ப்பை இழந்தார் காஜல்

7/14/2011 4:41:40 PM

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து ப¤ரபலமானார் காஜல் அகர்வால். Ôசின¤மாÕ என்ற இந்தி படத்தில் நடித்திருந்தாலும் அங்கு பிரபலம் ஆகவில்லை. இந்நிலையில் இந்தி Ôசிங்கம்Õ படத்தில் அஜய் தேவகன் ஜோடியாக அவர் நடித்துள்ளார். இப்படம் வரும் 22ம் தேதி ரிலீசாகிறது. பெரிய படம் என்பதால் இதை எதிர்பார்த்து காத்திருக்கிறார் காஜல். இதற்கிடையே Ôபுட்டாÕ இந்தி படத்தை இயக்கிய புரி ஜெகன்னாத், அடுத்ததாக Ôபிசினஸ்மேன்Õ என்ற படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் இயக்குகிறார். தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கிறார். இந்தியில் அபிஷேக் பச்சன். மகேஷ்பாபுக்கு ஜோடியாக நடிக்கும் காஜலையே இந்தியிலும் நடிக¢க வைக்க இயக்குனர் புரி விரும்பினார். ஆனால் இப்போது அவர் நடிக்கவில்லையாம். காரணம், அபிஷேக் பச்சன் என்கிறார்கள். சில புதுமுகங்களை அபிஷேக் சிபாரிசு செய்திருப்பதாகவும் அதில் ஒருவரை ஹீரோயினாக தேர்வு செய்ய சொல்லிய¤ருப்பதாகவும் தெரிகிறது. இதனால் இந்தி Ôபிசினஸ்மேன்Õ பட வாய்ப்பை இழந்துள்ளார் காஜல்.




 

Post a Comment