சென்னை: சிங்கப்பூரில் சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்து ஓய்வெடுத்து வந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்புகிறார். இந்திய நேரப்படி இரவு 10 மணி வாக்கில் சென்னை திரும்பும் ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யபப்பட்டுள்ளது.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் இரு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார் ரஜினி. அதில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தால், சிங்கப்பூரில் உள்ள மெளன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடந்த சிகிச்சையில் அவரது உடல் நலம் தேறியது. குணமடைந்த அவர் மருத்துவமனையிலிருந்து திரும்பி சிங்கப்பூரிலேயே ஒரு அபார்ட்மென்ட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார்.
தற்போது ஓய்வின் காரணமாக முழு குணமும் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த். இந்திய நேரப்படி சிங்கப்பூரிலிருந்து மாலை 6மணிக்கு ரஜினி சென்னை கிளம்புகிறார். இரவு 10 மணி வாக்கில் சென்னையை வந்தடைவார்.
சென்னை வந்ததும் நேராக கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்கவுள்ளார் ரஜினிகாந்த். போயஸ் தோட்ட இல்லத்தில் வாஸ்துப்படியான மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதால் அது முடிந்ததும்தான் போயஸ் தோட்ட வீட்டுக்கு ரஜினி வருவார்.
சிறப்பான வரவேற்பு
ரஜினிகாந்த் சென்னை வந்து இறங்கியதும் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். விமான நிலையத்திலிருந்து ரஜினி செல்லும் வழியெங்கும் வரவேற்பு அளிக்கப்படவுள்ளதாம்.
அமைதியாக வரவேற்க வேண்டும்-லதா
இதற்கிடையே, ரஜினி ரசிகர்களின் அன்பினால் நெகிழ்ந்துள்ள அவரது மனைவி லதா ரஜினிகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியை வரவேற்க வரும்போது மிக மிக கவனமாகவும், அமைதியாகவும், யாருக்கும் எந்தத் தொல்லையும் இல்லாத வகையில் நடந்து கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment