குருவாயூர் கோயிலுக்கு நயன்தாராவுடன் பிரபுதேவா வருகை!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

குருவாயூர் கோயிலுக்கு நயன்தாராவுடன் பிரபுதேவா வருகை!

7/14/2011 12:54:59 PM

நடிகை நயன்தாராவுடன் குருவாயூர் கோயிலுக்கு வந்து பிரபுதேவா  தரிசனம் செய்தார். நடிகர் பிரபுதேவாவும், நடிகை நயன்தாராவும் காதலித்து வருகின்றனர். இதற்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார். இருவரும் விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கில், கடந்த வாரம் விவாகரத்து வழங்கப்பட்டது. இதையடுத்து, பிரபுதேவாவும் நயன்தாராவும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். இதற்காக நயன்தாரா சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.  இந்த நிலையில், பிரபு தேவா – நயன்தாரா ஜோடி நேற்று காலை குருவாயூர் கோயிலுக்கு வந்தது. பிரபுதேவா மட்டும் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். நயன்தாரா கிறிஸ்தவர் என்பதால், கோயிலுக்கு செல்லாமல் காரில் அமர்ந்திருந்தார். பிரபுதேவா சாமி கும்பிட்ட பிறகு, கோயிலுக்கு வாழைக்குலை காணிக்கை செலுத்தினார். பின்னர், நயன்தாராவுடன் காரில் புறப்பட்டு சென்றார்.

 

Post a Comment