பாலாவின் அடுத்த ஹீரோ ‘சரத் குமார்’!
7/21/2011 10:55:27 AM
அவன் இவனுக்குப் பிறகு புதுமுகம் ஒருவரை வைத்து படமெடுக்க இருப்பதாக பாலா தெரிவித்திருந்தார். இந்தப் படத்துக்குப் பிறகு விஷாலை வைத்து இயக்குவதாகவும், விக்ரமுடன் ஒரு படத்தில் இணைவதாகவும் பல்வேறு ஹாஸ்யங்கள். இதில் எது உண்மை? சமீபத்தில் பாலா சரத்குமாரை சந்தித்துப் பேசியிருக்கிறார். தனது அடுத்தப் படத்தில் சரத்குமாரை நடிக்க வைப்பது குறித்து பாலா பேசியதாக அவருக்கு நெருக்கமான சட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில நாட்களில் முழு விவரம் தெரிய வரலாம். படப்பிடிப்பு தொடங்கும் வரை பாலா படத்தின் ஹீரோ யார் என்பது மர்மமாகவே இருக்கும்.
Post a Comment