மும்பை குண்டுவெடிப்பு: விருது நிகழ்ச்சியை நிறுத்திய ஐஸ்வர்யா

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
மும்பை குண்டுவெடிப்பு: விருது நிகழ்ச்சியை நிறுத்திய ஐஸ்வர்யா

7/14/2011 12:53:49 PM

மும்பை தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார். நேற்று மாலை மும்பையின் முக்கியப் பகுதிகளில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களால் பாலிவுட் அதிர்ச்சி அடைந்துள்ளது. தாயாகப்போகும் ஐஸ்வர்யா ராயும் பேரதிர்ச்சி அடைந்துள்ளார். ஐஸ்வர்யா கணவர் அபிஷேக்குடன் நேற்று டெல்லிக்கு சென்றிருந்தார். அங்கு ஐஸ்வர்யாவுக்கு பிரெஞ்சு அரசு நேற்று விருது வழங்குவதாக இருந்தது. இந்த தாக்குதல் சம்பவம் பற்றி கேட்டவுடன் இந்த நிகழ்ச்சியை தள்ளிவைக்குமாறு ஐஸ்வர்யா கேட்டுக் கொண்டார். இது குறித்து ஐஸ்வர்யா ராய் கூறியதாவது, நான் விருது வாங்குவதற்காக டெல்லிக்கு வந்தேன். ஆனால் அதற்கு இது சரியான நேரம் அல்ல. இந்த விழாவை ஒத்திவைக்க வேண்டும் என்று பிரெஞ்சு தூதரை கேட்டுக் கொள்வது தான் சரி என்று நானும், என் குடும்பத்தாரும் நினைத்தோம் என்றார். இந்த விழாவில் கலந்து கொள்ள அமிதாப்பும் டெல்லிக்குச் சென்றிருந்தார். ஆனால் மும்பை சம்பவம் பற்றி கேட்டதும் அவர் விழாவிற்கு செல்லவில்லை.




 

Post a Comment