ஆமிர்கான் படம் மீது வழக்கு தொடர ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் திட்டம்

|


டெல்லி: ஆமிர்கான் தயாரிப்பில் வெளியாகியுள்ள டெல்லி பெல்லி படத்தில் சான்ட்ரோ காரை கேவலப்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.

இதுகுறித்து நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இதுதொடர்பாக எங்களது சட்டக் குழு ஆலோசித்து வருகிறது. படத்தின் சில காட்சிகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். விரைவில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

ஆமிர்கானும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள டெல்லி பெல்லி படத்தில், சான்ட்ரோ காரை கிண்டலடிப்பது போலவும், அதை விமர்சிப்பது போலவும் காட்சிகள் உள்ளன. இது தங்களது நிறுவனத்தையும், தயாரிப்பையும் அவதூறு ஏற்படுத்தும் செயல் என்று ஹூண்டாய் நிறுவனம் கருதுகிறது.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தங்களை ஹூண்டாய் நிறுவனம் தொடர்பு கொள்ளவில்லை என்று ஆமிர்கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி பெல்லி படத்தில் ஆமிர்கானின் உறவினரான இம்ரான் கான் நடித்துள்ளார்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹூண்டாய் நிறுவன கார் சான்ட்ரோவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment