ஒரு மாத ஓய்வுக்கு பின் ரசிகர்களை ரஜினி சந்திப்பார்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஒரு மாத ஓய்வுக்கு பின் ரசிகர்களை ரஜினி சந்திப்பார்

7/21/2011 10:20:33 AM

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ராகவேந்திரா ஆலயத்தில் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து திரும்பியதற்காக 12 விதமான ஹோம பூஜைகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் ரஜினிகாந்தின் சசோதரர் சத்யநாராயணராவ் கெய்க்வாட்&கமலாபாய் தம்பதிகள் கலந்து கொண்டு ரசிகர் மன்றம் சார்பில் 20 தம்பதியர்களுக்கு சுமங்கலி பொருட்களை வழங்கினர். அப்போது, சத்யநாராயணராவ் கெய்க்வாட் நிருபர்களிடம் கூறியதாவது: எனது சகோதரர் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து திரும்பியுள்ளார். எங்கள் பூர்வீக கிராமமான கிருஷ்ணகிரி அடுத்த வேப்பனஹள்ளி நாச்சிகுப்பத்தில் ஒரு ஆண்டில் பெற்றோர் நினைவாக மணிமண்டபம் கட்ட உள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் குறித்து ரஜினிகாந்துடன் பேசி முடிவு செய்வேன். ஒரு மாத ஓய்விற்கு பின் ரஜினி ரசிகர்களை நேரில் சந்திப்பார். இவ்வாறு சத்யநாராயணராவ் கெய்க்வாட் கூறினார்.

 

Post a Comment