சென்னை: மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது வீடுகளில் இன்றுகாலையில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு மேற்கொண்டனர்.
சென்னை, பெங்களூர், கொச்சி ஆகிய நகரங்களில் இவர்களுக்குச் சொந்தமான வீடுகள் உள்ளன. இங்கு காலையில் புகுந்த தனித் தனி அதிகாரிகள் படையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். வீடுகள் மட்டுமல்லாமல், அலுவலகங்களிலும் ரெய்டு நடந்தது.
சோதனை குறித்து இரு நடிகர்களுக்கும் முறைப்படியான தகவல் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த சோதனையின்போது கைப்பற்றப்படும் ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து இரு நடிகர்களுக்கும் முறைப்படி தெரிவிக்கப்படும் என வருமான வரித்துறை வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.
எது தொடர்பாக இந்த ரெய்டு என்பது தெரியவில்லை. இந்த ரெய்டு காரணமாக மலையாளத் திரையுலகில் பரபரப்பு நிலவுகிறது.
Post a Comment