7/11/2011 5:33:17 PM
வரும் புதன்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரசிகர்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆகி அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். சில வாரங்கள் டாக்டர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதால் சென்னை திரும்பவில்லை. தற்போது அவரது உடல்நிலை நூறு சதவீதம் குணமாகி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரை அழைத்து வர மூத்த மகள் ஐஸ்வர்யா நேற்று சிங்கப்பூர் சென்றார். புதன்கிழமை இரவு விமானத்தில் அவர் சென்னை திரும்புகிறார். அவர் சென்னை திரும்பியதும் ராணா படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்கபடுகின்றது .
ரஜினி வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்த ரசிகர்கள், அவருக்கு பிரமாண்ட வரவேற்பளிக்கும் ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர். விமான நிலையத்திலிருந்து அவரது வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் வரை வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
Post a Comment