7/21/2011 10:25:11 AM
ராகுல் காந்தி பற்றி தெரிவித்த விமர்சனத்துக்காக இந்தி நடிகை கேத்ரினா கைப் மன்னிப்பு கோரினார். இந்தி நடிகை கேத்ரினா கைப் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், 'எனது தந்தை காஷ்மீரை சேர்ந்தவர். தாய் இங்கிலாந்தை சேர்ந்தவர். அப்பா ஆசியர், அம்மா இங்கிலாந்துக்காரர். எனவே, நான் பாதி ஆசியன். இதற்காக நான் வெட்கப்படவில்லை. எனக்கு இதில் பெருமைதான். நான் மட்டுமா? ராகுல் காந்தி கூட அரை இந்தியர். அரை இத்தாலிக்காரர்' என்று கூறினார்.
இதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். யாரென்றே தெரியாத கேத்ரினா கைபுக்கு எல்லாம் பதில் சொல்லி, அரசியலின் கண்ணியத்தை குறைக்க விரும்பவில்லை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி கடுமையாக சாடினார். கேத்ரினாவுக்கு எதிராக காங்கிரசார் போராட ஆயத்தமான நிலையில், ராகுல் பற்றிய தனது விமர்சனத்துக்காக கேத்ரினா மன்னிப்பு கோரியுள்ளார்.
தனது கருத்து குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு கேத்ரினா அளித்த பேட்டியில் கூறியதாவது:நான் பாதி ஆசியன். இதில் பெருமைதான் என்று கூறி ஒரு உதாரணத்துக்காக ராகுலை பற்றி கூறினேன். அவரை தவறாக விமர்சிக்கவில்லை. எனது கருத்தை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விட்டன.
எனினும், யாருடைய உணர்வுகளாவது புண்பட நான் காரணமாக இருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன். எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. சாதாரணமாக தெரிவிக்கும் கருத்துக்களை ஊடகங்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடக் கூடாது. இவ்வாறு கேத்ரினா கூறினார்.
Post a Comment