சிங்கப்பூரில் ரஜினிக்கு உதவிய நடிகை மானு!

|


சிங்கப்பூரில் ரஜினி சிகிச்சைப் பெற்ற பிறகு, வசதியான குடியிருப்பில் தங்கி ஓய்வெடுக்க ஏற்பாடு செய்து தந்தவர் நடிகை மானு. இவர் காதல் மன்னன் படத்தின் அஜீத்துக்கு ஜோடியாக நடித்தவர்.

அந்த ஒரு படத்துக்குப்பிறகு நடிப்புலகிலிருந்து விலகி, நடனக் கலைஞராக புகழ்பெற்றுத் திகழ்கிறார். சிங்கப்பூரில் தயாரான சில படங்களுக்கு ஆலோசகராக செயல்பட்டார்.

இன்றைக்கு சிங்கப்பூரின் மிக முக்கிய கலைப் பிரமுகர்களுள் ஒருவராகத் திகழ்கிறார் மானு.

புதன்கிழமை சிங்கப்பூரிலிருந்து ரஜினி சென்னை திரும்பியபோது அவருடனே விமானத்தில் வந்தவர் மானு. ரசிகர்களிடம் ரஜினியின் கார் சிக்கிக் கொண்டதால் மானுவால் உடன் செல்ல முடியவில்லை.

பின்னர் நிருபர்கள் அவரிடம் நீங்கள் எப்படி ரஜினியுடன் வந்தீர்கள்? என்று கேட்டனர்.

உடனே அவர், சிங்கப்பூரில் நான்தான் அவரை கவனித்துக் கொண்டேன், என்றார்.

மேலும் பேச முயன்றபோது, பிறகு சந்திக்கிறேன் என்று கூறிச் சென்றார் மானு.
 

Post a Comment