7/21/2011 3:18:50 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
கவுதம இயக்கம், தன்னோட படத்துல நடிக்க கூப்பிடுறேன்னு சமந்த நடிகைக்கு வாக்கு கொடுத்திருந்தாராம்… கொடுத்திருந்தாராம்… ஆனா இதுவரைக்கும் எந்த அழைப்பும் இல்லையாம். இயக்குனரை நம்பி, தனக்கு வந்த ஒரு தெலுங்கு பட வாய்ப்பையும் நடிகை மறுத்துட்டாராம். அதை நினைச்சு, நினைச்சு நடிகை இப்போ கவலைப் படுறாராம்… கவலைப்படுறாராம்…
இருட்டு வேர்ல்ட் படத்துலேருந்து ஆண்ட நடிகை விலகிட்டாரு. அந்த படத்துல தன்னோட காட்சிகள்ல 60 சதவீதத்தை நடிகை முடிச்சிருந¢தாராம். அதுல 40 சதவீத காட்சிகளுக்கான சம்பளம் மட்டும் முன்பணமா வாங்கியிருந்தாராம்… வாங்கியிருந்தாராம்… இப்போ பேலன்ஸ் 20 சதவீத காட்சிக்கான சம்பளத்தையும் கொடுக்கணும்னு நடிகை கேட்கிறாராம்… கேட்கிறாராம்… இப்போ படத்துல நீங்க இல்லே. அதனால அந்த காட்சிகளுக்கான சம்பளமும் கிடையாதுனு தயாரிப்பு ஜகா வாங்குறாராம்… வாங்குறாராம்…
பிரகாச ஹீரோ படத்தோட முதல் 2 ஷெட்யூலுக்கு மொத்தமா கால்ஷீட் கொடுத்திருந்தாரு காஜலான நடிகை. இப்போ நடிகை, தேதிகளை பிரிச்சி தர்றேன்னு சொல்றாராம்… சொல்றாராம்… பர்சனல் விஷயமா இந்த மாற்றம்னு சொல்றாராம். இதனால இயக்கம் என்ன பண்றதுனு யோசிக்கிறாராம்… யோசிக்கிறாராம்… அப்படி என்ன பர்சனல் விஷயமோ என்று யூனிட்ல முணுமுணுக்கிறாங்களாம்…
முணுமுணுக்கிறாங்களாம்…
Post a Comment