போயஸ் கார்டனில் ரஜினி!

|


இந்த நிமிடத்தில் ரஜினி இருக்கும் இடம் எது தெரியுமா... அவரது அதே போயஸ் கார்டன் பிருந்தாவனம்தான்!

ரஜினி சிங்கப்பூரிலிருந்து திரும்பியதும் போயஸ் கார்டன் செல்வார், கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்குச் செல்வார் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில், திடீரென மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்குவதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இப்போது கிடைத்துள்ள உறுதியான தகவல்களின்படி, ரஜினி தங்கியிருப்பது வேறு எங்கும் அல்ல... அதே போயஸ் கார்டன் வீட்டில்தான்.

இந்த வீட்டில் மராமத்துப் பணிகள் மற்றும் வாஸ்து மாற்றப்பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில், இப்போது வீடு முழுக்க புதிய வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. இவற்றை பார்வையிடுவதோடு, வீட்டுக்கு வரும் பேரன்களையும் கொஞ்சி மகிழ்கிறாராம்.

இன்றைய தேதிக்கு ரஜினியை தினசரி வந்து பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு விஐபி, இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்தான்.

ராணாவின் கதையமைப்பில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று சொல்லிட்ட ரஜினி, காட்சிகளை கிட்டத்தட்ட ஒரு ஒத்திகையாகவே செய்து பார்க்கிறாராம்.

இன்னும் ஒரு மாதத்துக்குள் எல்லாமே செட்டிலாகிவிடும் என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமான வட்டத்தினர்.
 

Post a Comment