குடிசை ஜெயபாரதியின் குழந்தை கடத்தல் படம்
7/6/2011 11:40:22 AM
சைதன்யா மூவீஸ் சார்பில் 'குடிசை' ஜெயபாரதி தயாரித்து இயக்கி உள்ள படம் 'புத்ரன்'. ஒய்.ஜி.மகேந்திரா, சங்கீதா, மாஸ்டர் வருண் நடித்துள்ளனர். படம் பற்றி ஜெயபாரதி கூறியதாவது:
சமீப காலமாக அதிகரித்து வரும் குழந்தை கடத்தல் சம்பவங்கள் மனதை பாதித்தது. அந்த உணர்வில் உருவான படம்தான் இது. கடத்தல்காரர்களிடம் குழந்தையை பறிகொடுத்த சங்கீதாவுக்கு மனநோய் வருகிறது. அவரைக் குணப்படுத்த சென்னை அழைத்து வருகிறார் ஒய்.ஜி.மகேந்திரா. வந்த இடத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க அகிம்சை வழியில் போராடுகிறார். கடத்தல்காரர்கள் அவரை வன்முறை வழியில் ஒழித்துக்கட்ட நினைக்கிறார்கள். வெற்றி யாருக்கு என்பதுதான் படம். படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
Post a Comment