ராகுல் காந்தியை பாதி இந்தியர் என்று கூறி பெரும் கண்டனத்துக்கு உள்ளான கத்ரகினா கைப் நேற்று தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்டார்.
பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப் சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை பாதி இத்தாலிக்காரர் என்று விமர்சனம் செய்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், ராகுல்காந்தி பற்றிய விமர்சனத்துக்கு நடிகை கத்ரினா கைப் நேற்று வருத்தம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இது யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
Post a Comment