கார்த்தி திருமணத்துக்காக கோவை வந்தார் நக்மா!

|


நாளை நடக்கும் நடிகர் கார்த்தியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக, நடிகை நக்மா இரு தினங்களுக்கு முன்பே கோவை நகருக்கு வந்துவிட்டார்.

கார்த்தியின் அண்ணி நடிகை ஜோதிகாவின் அக்கா நக்மா. தங்கை மைத்துனர் திருமணம் என்பதால் அவரும் உரிமையுடன் கல்யாண வேலைகளில் களமிறங்கியுள்ளார்.

திருமணத்துக்கு இன்னும் 1 நாள் மட்டுமே உள்ள நிலையில் நடிகர் சூர்யா, மணமகன் கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோர் கோவையில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு தாங்களே நேரில் போய் அழைப்பு வைத்து வருகின்றனர்.

உறவினர்கள், விவிஐபிகள் அனைவரும் தங்குவதற்கு வசதியாக கோவையில் உள்ள ஓட்டல் லீ மெரிடியன், ரெசிடென்சி, ஜென்னி கிளப் மற்றும் முக்கிய ஓட்டல்களில் 600 அறைகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருமணம் நடக்க உள்ள கொடீசியா அரங்கம் வெகு பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
 

Post a Comment