7/6/2011 11:33:15 AM
சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் கதையை, இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ், 'வன யுத்தம்' என்ற பெயரில் படமாக எடுக்கிறார். இதில் வீரப்பனாக, கிஷோர் நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக அர்ஜுன், ரவிகாளே, கன்னட நடிகர் ராஜ்குமாராக இந்தி நடிகர் விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராய் உட்பட பலர் நடிக்கின்றனர். அஜயன் பாலா வசனம். விஜய் மில்டன் ஒளிப்பதிவு. வீரப்பன் மனைவியாக நடிக்க, இந்தி நடிகை ராணி முகர்ஜியுடன் பேசியுள்ளனர். தமிழ், கன்னடத்தில் தயாராகும் இந்தப் படம் பற்றி கிஷோர் கூறியதாவது:
இதில், வீரப்பன் பற்றி வெளியில் தெரியாத பல ஆச்சரியமான, சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கிறது. இயக்குனர் ரமேஷ், சில வருடங்களாக தேடி அலைந்து இந்த தகவல்களைச் சேகரித்திருக்கிறார். வீரப்பன் கேரக்டரை, சிலரால் தாங்கிக்கொள்ள முடியாது என்பது தெரியும். இருந்தாலும் யார் மனதையும் புண்படுத்தாமல் ஸ்கிரிப்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் நடந்த விஷயங்களை மட்டுமே ஆதாரத்துடன் படத்தில் வைத்துள்ளோம். அதை தாண்டி சினிமாவுக்காக எந்த மிகைப்படுத்தலும் இருக்காது. ஏற்கனவே வாழ்ந்த ஒரு கேரக்டரை படமாக்கும்போது இதை கவனத்தில் கொள்வது அவசியம் என்பதும் எங்களுக்குத் தெரியும். படத்தின் பெரும்பாலான காட்சிகள், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதும் அதையடுத்து நடந்த விஷயங்களுமாகவே இருக்கும். மற்ற கேரக்டர்களை விட வீரப்பன் கேரக்டரில் நடிப்பது சவாலானது. நான் அழகானவன் இல்லை. அழகான இளம்பெண்களுடன் மரத்தைச் சுற்றி ஆடவும் அவர்களை காதலிக்கவுமான முகம் என்னிடம் இல்லை. அதனால் இந்த மாதிரியான கேரக்டர்களில் என் திறமையை காட்ட நினைக்கிறேன்.
Post a Comment